ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகள்

Loading...

%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bfதிருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய உறவு திருப்தியளிக்கும் வகையில் இருக்க வேண்டும், உறவில் சங்கடங்கள் இருந்தால் ஒருசில நேரங்களில் அதுவே அவர்களது பிரிவுக்கு வழிவகுத்துவிடும்.
உறவின்போது முன்கூட்டியே வெளியேறும் விந்துக்களின் பிரச்சனைகளை சரிசெய்வதற்கு தினமும் சத்தான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.


அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் உள்ள விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது.


முட்டை

ஆண்கள் தினமும் காலையில் 2 முட்டைகள் சாப்பிட்டு வந்தால், முட்டையில் உள்ள விட்டமின் D பாலுணர்ச்சியை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டை தினமும் ஆண்கள் சிறிதளவு சாப்பிட்டால், அந்த சாக்லேட்டானது, ஆணுறுப்பின் ரத்த ஓட்டத்தைத் அதிகரிக்கச் செய்து, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வை சரிசெய்கிறது.


கேரட்

கேரட்டில் உடலுக்கு ஆரோக்கியமான விட்டமின்கள் மற்றும் அனைத்து வகையான அத்தியாவசிய கனிமச்சத்துக்களை கொண்டுள்ளது.
எனவே ஆண்கள் தினமும் கேரட்டை சாப்பிடுவதால், ஆணுறுப்பில் உள்ள தசைகள் வலிமையடையச் செய்து, ரத்த ஓட்டத்தைஅதிகரிக்கச் செய்கிறது.


ஓட்ஸ்

ஓட்ஸை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், மன இறுக்கம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்குவதோடு, அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் சத்துகள் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.அவகேடோ

அவகேடோ பழத்தில் விட்டமின்கள் C, B மற்றும் K அதிகமாக உள்ளது.
எனவே அவகேடோ பழத்தை தினமும் ஆண்கள் சாப்பிடுவதால், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கி, பாலுணர்வை அதிகரிக்கச் செய்கிறது.


ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் இருப்பதால்,இதை சாப்பிடும் ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது, முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கிறது.


வாழைப்பழம்

ஆண்கள் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவதால், அதில் இருக்கும் புரோமெலைன் என்னும் நொதி, ஆண்களின் பாலுணர்வை அதிகரிக்கச் செய்து, விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.வால்நட்ஸ்

வால்னட்ஸில் அதிக அளவில் புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது.
இதை சாப்பிடும் ஆண்களின் மலட்டுத்தன்மை, விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு வால்நட்ஸ் நல்ல பலனைத் தருகிறது.


பாதாம்

பாதாம் பருப்பில் ஜிங்க் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
எனவே இதை ஆண்கள் தினமும் சாப்பிட்டால், ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து, ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply