அன்னாசிப்பழ அல்வா

Loading...

%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be

தேவையான பொருட்கள்:

1. அன்னாசிப்பழம் : ஒரு கப்
2. நெய் : 1 மேஜைக்கரண்டி
3. சர்க்கரை : 1 மேஜைக்கரண்டி
4. கொழுப்பு குறைந்த பால்: 1 கப்
5. செமொலினா : 1 கப்
6. இனிப்பூட்டி (சர்க்கரைக்கு பதிலாக): 3 மேஜைக்கரண்டி
7. ஏலக்காய் தூள் : 1 தேக்கரண்டி
8. குங்குமப்பூ : சிறிதளவுசெய்முறை :
1. ஒரு ஆழமான வாணலியில் அன்னாசிப்பழக்கூழைப் போட்டு அதனுடன் சர்க்கரை அல்லது இனிப்பூட்டியை சேர்த்துக் கலக்கவும். 2. இதை 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும். 3. செமொலினாவை நெய் விட்டு மிதமான சூட்டில் இளம் சிவப்பாக மாறும்வரை வறுக்கவும். அவ்வாறு மாற நேரம் எடுக்கும் என்பதால் பொறுமையுடன் செய்யவும். 4. இப்போது அதில் பால் சேர்த்து நீர் விட்டு நன்றாக கிளறவும். இல்லையென்றால் கட்டியாக ஆகிவிடும். 5. இந்த கலவை கெட்டிப்பட்டவுடன் இதில் இனிப்பூட்டியைச் சேர்த்து வறன்டுபோகும் வரை கிளறவும். 6.இதனுடன் ஏற்கனவே செய்து வைத்துள்ள அன்னாசிப்பழக்கலவையை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். 7.இதில் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவையும் ஏலக்காய் தூளையும் சேர்த்து இரண்டு நிமிடம் சூட்டில் வைத்துக் கிளறவும். 8.உங்கள் அன்னாசிப்பழ கேசரி தயார். இதனை கண்ணாடிக் கிண்ணத்தில் போட்டு மூடியைக் கொண்டு மூடி தலைகீழாக மெதுவாக திருப்பினால் ஒரு வித்தியாசமான வடிவில் கிடைக்கும். இதனை உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்புகள் கொண்டு அலங்கரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply