அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்

Loading...

%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aeநம் நாட்டில் வெள்ளைத்தோலின் மீது மோகம் அதிகம் உள்ளது. இதனால் பலரும் தங்களது சருமத்தை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். உடலில் பலருக்கும் அக்குள், கழுத்து, தொடை, பிட்டம் போன்ற பகுதிகள் கருமையாக இருக்கும்.

தற்போது ஆண்கள் பெண்கள் என இருபாலரும் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிவதால், அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க கண்ட க்ரீம்களைத் தடவி வருகின்றனர். இப்படி கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தினால், அதனால் சிலருக்கு சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பொருட்களைக் கொண்டு அக்குளைப் பராமரித்து வந்தால், அக்குளில் இருக்கும் கருமையை எளிதில் வேகமாக போக்கலாம்பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இதனைக் கொண்டு அக்குளைப் பராமரித்தால், அக்குளில் இருக்கும் கருமையான சருமத்தைப் போக்கலாம். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அக்குளில் தடவினால், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வியர்வை நாற்றம் வீசுவது நீங்குவதோடு, அக்குள் கருமையும் மறையும்.


எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, எப்பேற்பட்ட கருப்பையும் போக்கும். அதற்கு எலுமிச்சையை துண்டுகளாக்கி, அக்குளில் தினமும் தேய்த்து வர வேண்டும்.தக்காளி

தக்காளியிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. இதனையும் தினமும் அக்குளில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அக்குள் கருமை வேகமாக மறையும்.உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கும் அக்குள் கருமையைப் போக்குவதில் மிகவும் சிறந்த பொருள். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அக்குள் கருமை வேகமாக மறையும்கடலை மாவு

கடலை மாவை தயிர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலால் அக்குள் கருமை நீங்குவதோடு, அப்பகுதி மென்மையாகவும் இருக்கும்வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அக்குளில் தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையை வேகமாக போக்கும்.கற்றாழை ஜெல்

அக்குளில் வளரும் முடியை ஷேவ் அல்லது வேக்ஸ் செய்த பின், கற்றாழை ஜெல்லை தடவினால், அக்குளில் உள்ள சருமம் அமைதியாகி, அக்குள் கருமையும் தடுக்கப்படும்.கல் உப்பு

கல் உப்பை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, கழுவி வர, அக்குள் கருமை வேகமாக நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply