483 கோடி டொலர்க்கு விலைபோன YAHOO

Loading...

483 கோடி டொலர்க்கு விலைபோன YAHOO
ஒரு காலத்தில் இணையத்தையே ஆட்சி செய்து வந்த யாகூ நிறுவனத்தின் ஆதிக்கம் 2000ம் ஆண்டிற்கு பின்னர் சரிய தொடங்கியது. யாகூவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது.
இதனால், சில மாதங்களுக்கு முன்பு யாகூ நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வெரிஸான் நிறுவனம் யாகூ நிறுவனத்தை 483 கோடி டொலர் கொடுத்து வாங்க உள்ளது. இந்த இணைப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கடந்த 2008ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4.400 கோடி டொலர் கொடுத்து யாகூ நிறுவனத்தை விலைக்கு கேட்டது. ஆனால் யாகூ நிறுவனம் மறுத்துவிட்டது குறிப்பிட தக்கது

Loading...
Rates : 0
VTST BN