4ஜி தொலைதொடர்பு சேவையை துவங்க உள்ள ரிலையன்ஸ் ஜியோ

Loading...

4ஜி தொலைதொடர்பு சேவையை துவங்க உள்ள ரிலையன்ஸ் ஜியோரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி தொலைதொடர்பு சேவையை வரும் 5-ந்தேதி முதல் வர்த்தக ரீதியாக துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டுக்கூட்டத்தில் அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தெரிவிக்கையில், ‘ஜியோ குழுவினருக்கு நான் ஏற்கனவே கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத இலக்குகளை நிர்ணயித்துள்ளேன். மிகக் குறுகிய காலத்திற்குள் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து புதிய உலக சாதனையை படைக்க திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 250 கோடி ஜிகா பைட்டாக மொபைல் இண்டர்நெட் டேட்டா பயன்பாடு உயரும்.’ என தெரிவித்துள்ளார்.
சோதனை முறையில் சேவை வழங்கிய போதே 1.5 கோடி பயனாளர்களை ரிலையன்ஸ் ஜியோ ஈர்த்துள்ளது. குறிப்பாக, எச்.டி.சி, இண்டெக்ஸ், விவோ, ஜியோனி, கார்பன், லாவா போன்ற பிராண்டுகளுடன் அறிமுகச் சலுகையாக அதிவேக மொபைல் பிராட்பேண்ட் டிரையல் ஆஃபர்களை ஜியோ வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, சோனி, சான்சுய், வீடியோகான், எல்.ஜி, சாம்சங், மைக்ரோமேக்ஸ், பேனசோனிக், ஏசஸ், டி.சி.எல், அல்காடெல் 4ஜி ஸ்மார்ட்போன்களுடனும் சில சலுகைகளை வழங்கி வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply