30 வயதுகளில் சருமத்தை இளமையுடன் பராமரிப்பது எப்படி

Loading...

30-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8830 வயது தொடங்கிய பிறகு, உங்கள் உணவுப்பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். உங்கள் உணவுகளில் அளவுக்கு அதிகமான பச்சை காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது அரை மணிநேரமாவது நடைபயிற்சி தர வேண்டும்.

அதுதவிர்த்து சருமத்திற்கு தகுந்த ஈரப்பதம் அளித்தால், செல்கள் சேதாரம் அடையாமல் புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். இதனால் இளமையை நீடிக்கக் செய்யலாம் . எப்படி சருமத்தை ஈரப்பதத்துடன் இளமையாகவும் 30 வயதிற்கு மேல் வைத்துக் கொள்வது என பார்க்கலாம்.


குளிப்பதற்கு முன் :
ஆலிவ் எண்ணெய்யை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். சுருக்கங்கள் இருக்கும் பகுதிகளில் வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை கொண்டு, கீழிருந்து மேல் நோக்கி, ஒரு 10 நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யவும். சிறந்த பலனைப் பெற, கொஞ்சம் தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் குளிப்பதற்கு முன் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க செய்யுங்கள். சுருக்கங்கள் எட்டிப்பார்க்காது.


ஃபேஸ் பேக் பயன்படுத்தும்போது :
நீங்கள் நிறைய பழ மற்றும் முட்டை போன்ற ஃபேஸ் பேக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அவைகளை முகத்தில் போட்டு காயும் வரை முகத்தை அசையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தசைகளை அசைக்கும்போது, சுருக்கங்கள் இன்னும் அதிகமாக விழுந்துவிடும். எதிர்விளைவை தரும். View Photos சிட்ரஸ் பழங்கள் : இது சருமத்திற்கு சிறந்த முறையில் நீர்ச்சத்தை அளிக்கும். சிட்ரஸ் பழ மசாஜ் விட்டமின் சி மற்றும் ஈ வளமையாக உள்ள ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், உணவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோன்று முகத்திற்கும் பயன்படுத்தலாம்.
இவை உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். சருமம் மென்மையாக இருப்பதற்கு சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவி செய்கிறது. அதேபோல் இப்பழங்களின் தோல்களும் அதே அளவிலான நன்மையை அளிக்கிறது.

ஆளிவிதை எண்ணெய் :
நெற்றியில் உள்ள சுருக்கங்களை நீக்க ஆளிவிதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு, 2-3 டீஸ்பூன் ஆளிவிதை எண்ணெய்யை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், இந்த சுருக்கங்கள் மாயமாவதை கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். இதற்கு பதிலாக நீங்கள் விளக்கெண்ணெயையும் பயன்படுத்தலாம். இதுவும் உடனடி பலனை அளிக்கும்.


முட்டை வெள்ளைக் கரு :
முட்டை வெள்ளைக்கருவுடன் கற்றாழை ஜெல் கற்றாழை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு இரண்டிலுமே விட்டமின் ஈ நிறைந்துள்ளது. இந்த இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.அதனைமுகத்திலும் கழுத்திலும் தடவுங்கள். கண்களை தவிர்த்துவிடவும். அப்படியே ஒரு 15 நிமிடங்களுக்கு விட்டு விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply