வயர்லெஸ் மூலமாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் அப்பிள்

Loading...

%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%9aதற்போதைய தொழில்நுட்ப உலகில் வயர்லெஸ் முறை மூலமாக மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.
இவ்வாறான நிலையில் தற்போது உள்ளதை விடவும் கூடிய தூரத்திற்கு வயர்லெஸ் மூலமாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இதைவிடவும் தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் சார்ஜிங் மேட் (Charging Mat) பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தில் இவ்வாறான துணைச் சாதனங்கள் எதுவும் இன்றி மின் முதலிலிருந்து அப்பால் காணப்படும் போதே சார்ஜ் செய்யக்கூடியதாக இருக்கும்.
இவ் வசதியினை 2017ம் ஆண்டில் அறிமுகமாகும் iPhone 7S மற்றும் iPhone 7S Plus ஆகிய கைப்பேசிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

Loading...
Rates : 0
VTST BN