அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்

Loading...

அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்அஷ்வகந்தா இப்போது எல்லாரிடமும் பிரபலமாகிக் கொண்டு வரும் மூலிகை. ஆனால் மிகப்பழமையான இந்த மூலிகை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் வளரக் கூடிய மூலிகைச் செடியாகும்.
இது மிக அற்புதமான மருத்துவகுணங்களைக் கொண்டுள்ள மூலிகைச் செடி. அதன் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது.
இது நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இலைகள் மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் அஷ்வகந்தா பொடி மற்றும் சூரணங்கள் வெவ்வேறு வகையில் நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். நோய்களுக்கென்று இல்லாமல் அவை உடல் வலிமையாக்கவும் பயன்படுகின்றன. அவற்றின் சிறந்த பலங்களைக் காண்போம்.


நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு :

அஷ்வகந்தா சூரணம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தி உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. இதனால் எல்லா உறுப்புக்களும் தேவையான வலிமையைப் பெறுகின்றன. மேலும் நோய் எதிர்க்கும் செல்கள் பலம் பெற்று எதிர்ப்புத்திறனை உடலில் அதிகரிக்கச் செய்கின்றன.


வலி நிவாரணி :

ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸினால் உண்டாகக்கூடிய வீக்கங்களை இந்த சூரணம் குறைக்கின்றன.மேலும் வலிகளை போக்கும் நிவாரணிகளாகவும் செயல்படுகின்றன.காயங்களை ஆற்றும் தன்மை கொண்டுள்ளது.


ஆன்டி-ஆக்ஸிடென்ட் :

அஷ்வகந்தா சூரணம் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்படுகிறது. உடலில் உண்டாகும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன.இளமையாக இருக்க உதவுகின்றது.


அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்!மன அழுத்ததை குறைக்கின்றது:

மன அழுத்தம் ஒரு ஸ்லோ பாய்ஸனாக செயல்பட்டு மற்ற உறுப்புக்களை பாதிக்கிறது என ஆய்வு கூறுகின்றது.இந்த சூரணம் மனதில் தேவையற்ற குழப்பங்களால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கின்றது.நரம்பு மண்டலத்தை தூண்டி அதன் செயல்களை அதிகரிக்கச் செய்து புத்துணர்வோடு இருக்கச்செய்கிறது.


இளமையை நீட்டிக்க :

சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தை போக்கும் காரணிகள் இந்த சூரணத்தில் உள்ளன. இறந்த செல்களை சருமத்தின் மூலம் வெளியேறச் செய்து, சருமத்திற்கு புத்துணர்வு தருகிறது.


மூளை சம்பந்தபட்ட நோய்க்கு தீர்வு:

டெமென்டியா என்ற மூளையில் ஏற்படும் நோய் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.இது பொதுவாக வயதானவர்களுக்கு வரும்.தொடர்ந்து அஷ்வகந்தா சூரனத்தை உட்கொள்ளும்போது டெமென்டியா நோய் கட்டுக்குள் வரும்.


கேன்ஸர் செல்களை விரட்டும் :

அஷ்வகந்தா சூரணம் கேன்ஸர் செல்களை அழிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. அதேபோல் கீமோதெரபியுடன் இந்த சூரணத்தையும் கொடுப்பதனால் கேன்ஸர் செல்கள் வேகமாய் அழிகின்றன என கூறுகின்றனர்.


உடலுறவு பிரச்சனைகளை போக்கச் செய்கிறது:

உடலுறவு சம்பந்தமான பிரச்சனைகளை இந்த சூரணம் போக்குகின்றது. உடலுறவு செய்யத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது இந்த சூரணம்.

Loading...
Rates : 0
VTST BN