ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4விமானத்தில் சாம்சுங் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போனின் ஆளியை அழுத்தவோ, மின்னேற்றவோ வேண்டாமென அமெரிக்க அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரித்துள்ளார்கள்.
அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு எச்சரிக்கை அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.
பரிசோதிக்கப்பட்ட பயணப் பொதிகளுக்குள் ஸ்மார்ட்போனைப் போட வேண்டாம் எனவும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னேற்றப்படும் சமயத்திலோ, அதற்குப் பின்னரோ கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்கைப்பேசிகள் வெடித்துச் சிதறியதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
போன்கள் வெடித்துச் சிதறியமைக்கு மின்கலப் பிரச்சினைகள் தான் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் அவுஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சுங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகளை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சுங்சின் புதுரக போன் வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் கைப்பேசிகளை அந்நிறுவனம் திரும்பப்பெற்றதோடு மட்டுமல்லாமல் விற்பனையையும் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply