விரைவாதத்தை குணமாக்கும் வல்லாரை

Loading...

விரைவாதத்தை குணமாக்கும் வல்லாரைநலம் தரும் நாட்டு மருத்துவத்தில், ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதத்தை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். மணித்தக்காளி, ஊமத்தம் இலை, வல்லாரை போன்றவை விரைவீக்கத்தை குணப்படுத்தும் மருந்துகளாக விளங்குகின்றன. மணித்தக்காளி ஈரலுக்கு பலம் தரும் தன்மை கொண்டது. மஞ்சள் காமாலையை போக்கும். இதன் காய்களை வற்றலாக்கி சாப்பிடலாம். உணவாக சாப்பிடுவதால் ஈரல் நோய்கள் போகும். விதை வீக்கம் குணமாகும். ஊமத்தம் வெள்ளைப் பூக்களை உடையது. இதை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். வல்லாரை மூளைக்கு இதமானது. விரை வீக்கத்தை சரிசெய்ய கூடியது. ஊமத்தம் இலைகளை பயன்படுத்தி விரைவாதத்தை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

ஊமத்தம் இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இளஞ்சூடாக இருக்கும்போது விரைவீக்கத்தில் வைத்து கட்டுவதால் விரைவீக்கம் சரியாகும். சில நாட்கள் தொடர்ந்து இதை கட்டுவதால் வெகு விரைவில் வீக்கம் கரைந்து போகும். விரைவாதம் ஆண்களை பற்றக்கூடியது. இது வீக்கத்தை ஏற்படுத்தும். வாதநீர் சேர்ந்து வீக்கம் ஏற்படுவதால் வலியை கொடுக்கும். சாலையோரங்களில் எளிதாக கிடைக்கும் ஊமத்தன் இலை இதற்கு மருந்தாகிறது. ஊமத்தன் இலை கிடைக்கவில்லை எனில் மணித்தக்காளியை விரைவீக்கத்துக்கு பயன்படுத்தலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட மணித்தக்காளி மிளகாய் செடியை போன்றது.
வீக்கத்தை கரைக்க கூடியது. வலியை போக்கும் தன்மை கொண்டது. மணித்தக்காளியை விளக்கெண்ணெயில் வதக்கி விரைவாதத்தில் வைத்து கட்டுவதால் விரைவீக்கம் சரியாகும். வல்லாரையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன் வல்லாரை கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். இளஞ்சூடாக இருக்கும்போது விரைவாத்துக்கு மேல் வைத்து கட்டிவைத்தால் விரைவாதம் சரியாகும். தசை சிதைவு குறையும். வீக்கம் கரையும். வல்லாரை வாதத்தை போக்கும் உன்னதமான மருந்தாக விளங்குகிறது.
இது, வீக்கத்தை வற்றும் தன்மையை கொண்டது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வல்லாரை இலை பொடியை கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். கால் ஸ்பூன் பசு நெய் சேர்த்து கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர விரைவீக்கம் குறையும். வல்லாரை இலை பசை சுண்டைகாய் அளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட்டுவந்தால் விரைவீக்க பிரச்னை சரியாகும். ஆசனவாயில் ஏற்படும் கொப்புளங்களை போக்கும் மருந்துவம் குறித்து பார்க்கலாம். ஆசனவாய் அருகே கொப்புளங்கள் ஏற்பட்டு நீர் வெளியேறும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குப்பைமேனி சூரணத்தை சிறிது காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ஆசனவாய் கொப்புளங்கள் சரியாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply