விரால் மீன் குழம்பு

Loading...

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81
தேவையான பொருட்கள் :

விரால் மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 250 கிராம்
தக்காளி – 250 கிராம்
தேங்காய்ப்பால் – 2 கப்
பூண்டு – 1
கடுகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – அளவுக்கு
கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை :

* மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பாலை விட்டு நன்கு கொதிக்கும் போது மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்த பின் அடுப்பை மிதமான தீயில் 7 நிமிடம் வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
* சுவையான விரால் மீன் குழம்பு ரெடி.

குறிப்பு:

எப்போதுமே விறால் மீன் வாங்கும்போது முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்க வேண்டும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply