வாட்ஸ் ஆப் செயலி ஆபத்தானதா

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறியுள்ள வாட்ஸ்-ஆப் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்-ஆப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள encryption தொழிநுட்பம் மூலம் அனுப்பியவர்கள் மற்றும் பெறுபவர்கள் மட்டுமே குறித்த தகவல்களை பார்க்க முடியும்.
இந்நிலையில் இந்த தொழிநுட்ப வசதி நாட்டிற்கே பெரிய ஆபத்தாக இருப்பதாகவும், இதனால் வாட்ஸ்-ஆப்பை தடை செய்ய வேண்டும் என்றும் சுதீர் யாதவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இரு பயனாளிகளுக்கு இடையே பரிமாறப்படும் இந்த தகவல்களை வாட்ஸ்-ஆப் நிறுவனமோ மற்ற யாருமோ பெறவோ, படிக்கவோ முடியாது.
இதனால் வாட்ஸ்-ஆப் வழியாக செய்யப்படும் அழைப்புகள், வீடியோ, படங்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உளவு நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியாது.
தற்போது வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ள ‘256 பிட் என்கிரிப்ட்’எனப்படும் ஒரு ரகசிய குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.
சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் அதிநவீன கணனிகளாலும் கூட இந்த உரையாடல்களையோ, ஆவணங்களையோ இடைமறித்து கண்டுபிடிக்க முடியாது.
இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே வாட்ஸ் ஆப்க்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வைபர், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற ஆப்களையும் தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையூன் 29ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply