வாகனம் வைத்திருப்பவரா நீங்கள் கண்டிப்பா படியுங்க

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80எந்த வாகனமாக இருந்தாலும் சரி, அது மூச்சு வாங்காமல் ஹாயாய் ஓட வேண்டுமானால் பெட்ரோல் கலப்படம் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும். தரமான பெட்ரோல் என்றால் அதன் டென்சிட்டி, அதாவது அடர்த்தி எண் சரியானபடி இருக்க வேண்டும்.
இதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளவு காட்டும் மீட்டர்களுக்கு மேல் ‘டென்சிட்டி’ என்று எழுதி, பெட்ரோலின் அடர்த்தி இவ்வளவு சதவீதம் உள்ளது என்று குறிக்கப்பட்டு இருக்கும். வாகன ஓட்டிகள் அதைப் பார்த்து பெட்ரோலின் அடர்த்தி எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
* எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோலைப் பாதுகாத்து வைக்க பூமிக்கடியில் சேமிப்புக் கலன்களைப் பதித்திருப்பார்கள். காரணம், பெட்ரோலின் அடர்த்தி ஒரே சீரான நிலையில் இருக்க வேண்டுமானால் அந்த இடம் சற்று குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
பூமிக்கு மேல் வைத்தால், பகல் நேரத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பெட்ரோல் ஆவியாகி, அதன் அடர்த்தி குறைந்துவிடும் என்பதால் பூமிக்கு அடியில் வைக்கிறார்கள்.
* வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்குச் சரியான நேரம் இரவு அல்லது அதிகாலை நேரம்தான். குளிர்ச்சியாக இருக்கும் இரவு நேரத்திலோ, அதிகாலையிலோ பெட்ரோல் போட்டால் அதன் அளவு சரியாய் இருக்கும்.
சில நேரங்களி்ல சற்று அதிகமாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது. நன்றாக வெயிலடிக்கும் நேரத்தில் பெட்ரோல் போட்டால் நிச்சயம் அளவு குறைவாக இருக்கும். இதை சிந்தித்துச் செயல்பட இந்த அவசர உலகில் எவருக்கும் நேரமில்லை!.
* வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது எப்போதும் டேங்க் முழுவதும் நிரப்பக் கூடாது. பலர் இந்தத் தவறை செய்கின்றனர். பெட்ரோலை டேங்க் முழுவதும் நிரப்பும்போது டேங்க்கின் உள்ளே காற்று இருக்காது.
காற்று இல்லாத காரணத்தால் வெப்பம் அதிகமாகி பெட்ரோல் ஆவியாக ஆரம்பிக்கும். இதனால் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் வரை ஆவியாகி வீணாகிவிட வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் டாங்க்கின் பாதி அளவுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டால் இந்த ஆவியாதலைத் தவிர்க்கலாம். அதுவே உத்தமம்.
* வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அதிமுக்கிய விஷயம்… நீங்கள் பெட்ரோல் போடச் செல்லும் சமயம் பங்கில் அப்போதுதான் லாரி மூலம் பெட்ரோல் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அங்கே பெட்ரோல் போடாதீர்கள். காரணம்… புதிதாய் பெட்ரோல் நிரப்பப்படும் போது டேங்கின் அடியில் தேங்கி இருக்கும் கசடுகளை மேலே கொண்டு வந்து டேங்கைக் கலங்கலாக்கியிருக்கும்.
அப்படிப்பட்ட பெட்ரோலைப் போட்டால் அது உங்கள் வாகன இன்ஜினைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்க! அதுமாதிரியான சமயங்களில் ஒரு மணி நேரம் கழித்து அந்த பங்க்குக்குப் போவதே சிறந்தது!.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply