வயிற்று புண்களை ஆற்றும் பேரிக்காய்

Loading...

%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8dஉடலுக்கு புத்துணர்வை தரக்கூடியதும், வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டதும், மலச்சிக்கலை போக்க கூடியதும், தொண்டை புண், வலியை குணப்படுத்த கூடியதும், சளி, இருமலை போக்கவல்லதுமான பேரிக்காயை பற்றி பார்ப்போம். பேரிக்காய் காயாக இருக்கும்போது, அது கெட்டியாக பச்சை நிறத்திலும், பழுத்தபின் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். அதிக நார்ச்சத்து, நீர்சத்து மிகுந்தது. இதை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வை தரக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.
பேரிக்காயை அரைத்து பசையாக எடுத்துகொள்ள வேண்டும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, நீர்விடாமல் பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். பின்னர் ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கலாம். இதனுடன் நீர்விட்டு பருகுவதால், உடல் புத்துணர்வு ஏற்படும். பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயை குணப்படுத்தும். பேரிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கிருமி நாசினியாக விளங்கும் இது நுண் கிருமிகளை அழிக்க கூடியது.
பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பேரிக்காய் சாற்றுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது, அது புத்துணர்வு தரும் பானமாகவும் அமைகிறது. இதனால் உடல் வலிமை பெறும். ஆப்பிளை விட அதிக நார்ச்சத்து உடையது பேரிக்காய். மலச்சிக்கலை போக்கும். உடலில் புண் இருந்தால் ஆற்றும். குழந்தைகளுக்கு கொடுப்பதனால் எலும்புகள் வளரும். வயிற்றுக்கோளாறு சரியாகும். பேரிக்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து, அதை ஓரிரு ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும்.
பேரிக்காயில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து மிகுந்துள்ளது. பேரிக்காயை கொண்டு தொண்டை வலி, சளி, இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் பேரிக்காய் பசையை எடுத்து கொண்டு அதனுடன் 2 வெற்றிலையை நறுக்கி போடவும். பின்னர், நீர்விட்டு தேனீர் தயாரிக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம். இதன்மூலம், தொண்டை தொடர்பான நோய்கள் சரியாகும். தொண்டை புண், வீக்கம், வலி குணமாகும். சளி, இருமல் சரியாகும்.
குரல்வளைக்கு ஆரோக்கியத்தை தருக்கிறது. மாதவிலக்கு நின்றுபோனவர்களுக்கு எலும்பு பலத்தை தரக்கூடியது.செரிமான கோளாறுகளை சீர்செய்யும். பேரிக்காய் சாறு நோய்எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்களை போக்கவல்லது. வலி நிவாரணியான இது வீக்கத்தை கரைக்க கூடியது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. வயிற்று கோளாறுகளை சரிசெய்து புற்றுநோயை தடுக்கிறது.
பேரிக்காய் பசையை முகத்தில் தடவும்போது முகம் புத்துணர்வு பெறும். பேரிக்காய் பசையுடன் 4 சொட்டு எழுமிச்சை சாறு, கொண்டை கடலை மாவு அல்லது கடலை மாவு, தேன் சேர்த்து முகத்துக்கு வாரம் ஒருமுறை போடும்போது கரும்புள்ளி மறையும், சுருக்கம் மறையும். பேரிக்காய் மலச்சிக்கலை போக்கி ஆசனவாயில் புற்றுவராமல் தடுக்கும். பேரிக்காய் எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply