லிப்ஸ்டிக் போடும் போது பெண்களே உங்கள் கவனத்திற்கு

Loading...

%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa1. பொதுவாக லிப்ஸ்டிப் போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி பத்து நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைத்த பிறகு லிப்ஸ்டிக் போடுவது நல்லது. அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள். காரணம் உதடுகள் எளிதில் வறண்டு விடும்.

2. ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு மேல் உபயோகப்படுத்த கூடாது. இது உதடுகளின் தன்மையை பாதித்து விடும். லிப்ஸ்டிக் பூசிய பிறகு உதட்டால் ஈரப்படுத்துவதையும், நீர் ஆகாரங்கள் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.

3. லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பென்சிலால் லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில் அவுட்லைன் போடவேண்டும். மெலிதான உதடுகள் கொண்டவர்கள் உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரையவேண்டும், பருமனான உதடுகள் உள்ள பெண்கள் உதடுகளின் உள் பகுதியிலேயே அவுட் லைன் போடவேண்டும்.

4. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு உதடுகளில் வாஸ்லின் தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன்பு வாசலின் உபயோகித்தாலும் உதடுகள் பளபளக்கும்.

5. அதிகமாக லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுப்பது நல்லது. துணிகளாலும், கைகளை பயன்படுத்தி அகற்றுவதை தவிர்க்கவேண்டும்.

6. வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன்,லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் லிப்ஸ்டிக் பூசுங்கள்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN