ராஜஸ்தானி மசாலா கிரேவி

Loading...

%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf
மசாலாத்தூள் அரைக்க…

முழு தனியா – 4 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்,
சுக்குத்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்,
பச்சை ஏலக்காய் – 6,
கருப்பு ஏலக்காய் – 4,
பட்டை – 3-4 துண்டு,
நீட்டு சிவப்பு மிளகாய் – 10,
லவங்கம் – 10,
மிளகு – 1 டீஸ்பூன்,
ஜாதிக்காய் – 1 துண்டு,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
காஷ்மீர் சிவப்பு மிளகாய் – 2-4,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.


கிரேவிக்கு…

வெங்காயம் – 4,
தக்காளி – 4 ( தனித்தனியாக விழுதாக அரைக்கவும்),
சீரகம், இஞ்சி, பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?


மசாலா செய்ய…

எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து அல்லது நன்கு வெயிலில் காய வைத்து தூளாக செய்து ஸ்ேடார் செய்யவும். இந்த தூள் கிட்டத்தட்ட 65 கிராம் வரும். 6 மாதம் வரை ஸ்டோர் செய்யலாம். 1-2 டீஸ்பூன் போட்டு எப்போது வேண்டுமென்றாலும் உபயோகிக்கலாம்.

கிரேவி செய்ய..

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, 1/2 டீஸ்பூன் சீரகம், வெங்காயம் விழுது, தக்காளி விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலாத்தூளில் 1½ ஸ்பூன் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து நன்கு வாசம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து ேதவைப்படும் போது உபயோகிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply