ரசப்பொடி

Loading...

ரசப்பொடி
தேவையானவை:

1. மிளகாய் வற்றல் – 200 கிராம்
2. தனியா – 500 கிராம்
3. மிளகு – 200 கிராம்
4. சீரகம் -200 கிராம்
5. துவரம் பருப்பு -250 கிராம்
6. விரளி மஞ்சள் -100கிராம்
7. காய்ந்த கறிவேப்பிலை தேவையான அளவு
8. கடுகு-2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நல்ல வெய்யிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.
மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அறைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.
வீட்டிலேயே குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.
மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.
இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாஸனையாகவும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply