யோக்கட்

Loading...

%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d

தேவையான பொருட்கள்

பால் – ஒரு லிட்டர்
சீனி – 130 கிராம்
ஜெலற்றீன் – ஒரு தேக்கரண்டி
யோக்கற் – ஒரு கப்
யோக்கற் கப் – 30 கப்
தேமோ மீற்றர் – ஒன்று
கொதிநீர் – 4 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவையானளவு
ஓகண்டி துணி – தேவையானளவு
கலரிங் – 4 துளிகள் (விரும்பினால்)
எசன்ஸ் – 3 துளிகள் (விரும்பினால்)
இக்குபேற்றர்
யோக்கட்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் பால், சீனி இரண்டையும் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அந்த பெரிய பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.
அதன் பின்பு பாலின் வெப்பநிலையை தேமா மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அதன் பின்பு 30 நிமிடத்திற்கு அடுப்பிலே வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.
பால் ஆற தொடங்கும் போது தேமோ மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 60°cக்கு வந்தபின்பு ஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்து ஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அதன் பின்பு பாலின் வெப்பநிலை 40°c அடையும் போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும்.
பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து யோக்கற் கப்பில் ஊற்றி 40°c வெப்பநிலையில் 5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.
யோக்கற் இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்கவும்.
பின்பு எடுத்து 24 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும். பின்பு எடுத்து அறை வெப்பநிலையில் 2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply