யு டெலிவென்சர் நிறுவனத்தின் அறிமுகம் YUTOPIA

Loading...

%e0%ae%af%e0%af%81-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இருக்கும் யு டெலிவென்சர் நிறுவனத்தின் அறிமுகம் தான் யுடோபியா (Yutopia).
கடந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு வந்த இந்த மொபைலில் என்னென்ன வசதிகள் உள்ளன, இதன் வசதிகள் மற்றும் அந்த வசதிகள் பயன்தரக்கூடியவையாக இருக்கின்றனவா என்பது குறித்து பார்ப்போம்.
யு நிறுவனத்தின் அதிசிறந்த கைப்பேசி என்ற விளம்பரத்துடன் வந்த இந்த கைப்பேசியானது, விமானம் தயாரிக்கும் தரம்கொண்ட அலுமினியம் மற்றும் வெயிஸ்ட்லைன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் (மைக்ரோ மற்றும் நானோ) வசதி கொண்டது, மேலும், ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் (Android Lolipop 5.1.1) அடிப்படையிலான சியனொஜென் ஓஎஸ் 12.1 மூலம் இயங்குகிறது.
565ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1440×2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட தொடுதிரை மிக துல்லியமான வீடியோவை காண உதவுகிறது.
4 ஜிபி RAM வசதி உள்ளதால் இதன் செயல்பாடுகள் மிக வேகமாகவே உள்ளது. மேலும் 32 ஜிபி Internal Memory மற்றும் 128 ஜிபி வரை நீடிக்கத்தக்க External Memory வசதி உள்ளது.
3,000mAh Internal battery உள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை தேவையில்லை. எனினும் நாள் முழுவதும் தொடர்ந்து மொபைலை பயன்படுத்துவர்கள் கொஞ்சம் பவர் பேங்கை கையில் வைத்துகொள்வது நல்லது.
21 பின்புற காமெரா மற்றும் 8 MP முன்புற கமெரா ஆகியவை இணைந்து வந்துள்ளது. அப்பிள், சாம்சுங், சோனி நிறுவனத்தின் கமெரா அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும் விலையை ஒப்பிடும்போது இந்த விலையில் சிறந்த கமெரா வசதி கொண்ட கைப்பேசியாக யுடோபியா திகழ்கிறது.
இதன் வடிவம் , சிறந்த டிஸ்ப்ளே திரை ஆகியவை இதன் சிறப்புகளாக முன்வைக்கப்படுகின்றன. அதே வேளையில் பேட்டரி பேக் அப்(Battery Backup), கமெரா வசதிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்னும் கோரிக்கையும் எழுகின்றன.
ஒட்டுமொத்தமாக 25 ஆயிரம் ரூபாயில் சந்தைக்கு வந்துள்ள இந்த கைப்பேசி சிறந்த கைப்பேசி ஆகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply