மொறுமொறுப்பான பிரட் பஜ்ஜி

Loading...

மொறுமொறுப்பான பிரட் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1/2 கப் கடலை மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் சாட் மசாலா – 3/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு பிரட் துண்டுகள் – 4-5 எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:
முதலில் பிரட்டை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பஜ்ஜி ரெடி!!!

Loading...
Rates : 0
VTST BN