மேத்தி உருளைக் கிழங்கு பொரியல்

Loading...

%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு துண்டுகள் – 200 கிராம்
வெந்தயக்கீரை – ஒரு கப்
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – தேவையான அளவு
கடுகு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2செய்முறை :

* வெங்காயம், வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்த பின், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.
* கீரை பாதியளவு வெந்ததும் இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் போட்டு 5 நிமிடம் நன்றாகக் கிளறி இறக்கவும்.
* சுவையான சத்தான மேத்தி உருளைக் கிழங்கு பொரியல் ரெடி.
* இதை சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply