மேட் இன் இந்தியா மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் செப்டம்பர் 29-ல் அறிமுகம்

Loading...

%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் மேட் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியை இந்தியாவில் செப்டம்பர் 29-ல் அறிமுகம் செய்ய உள்ளனர். இந்தியாவில் பண்டிகை காலங்கள் வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உற்பத்தி; ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியை, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனே அருகே சகன் உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்கிறது.

விற்கப்படும் விதம்; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, தற்போதைய நிலையில் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்ட வடிவிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது.

விலை; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் டீசல் வேரியன்ட் 50.70 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையிலும், பெட்ரோல் வேரியன்ட் 50.90 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையிலும் விற்கப்படுகிறது.

போட்டி; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, ஆடி க்யூ5 மற்றும் பிஎம்டபுள்யூ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

பெட்ரோல் வேரியன்ட்; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் வேரியன்ட், 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 241 பிஹெச்பியையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

டீசல் வேரியன்ட்; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் டீசல் வேரியன்ட், 2.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 168 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் இரண்டுமே 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

4மேட்டிக்; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்கள் இரண்டுமே 4மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்; மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, 18-இஞ்ச் வீல்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், லெதர் சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், பானரமிக் சன்ரூஃப், நேவிகேஷன் வசதி கொண்ட 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply