முளைக்கீரை கோலா

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e2%80%89%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%beபொடியாக நறுக்கிய முளைக்கீரை – 2 கப்,
வெங்காயம் – 2,
நன்கு வேகவைத்த உருளைக்கிழங்கு – 1,
இஞ்சி, பூண்டு விழுது (விருப்பப்பட்டால்) – 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் விழுது – 1 டீஸ்பூன்,
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 3 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்.

வெறும் கடாயில் கடலை மாவை சிறிது நேரம் சிவக்காமல் வறுத்தெடுக்கவும். கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து பிழிந்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்கு மசிக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். பக்கோடா மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். சிறு உருண்டைகளாக உருட்டி பொரித்தெடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply