முக அமைப்பு மற்றும் நிறத்திற்கு ஏற்ப நகைகளை தேர்ந்தெடுக்கலாம்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4பெண்கள் புடவை, சல்வார், ஷீன், குர்தா, ஸ்கர்ட் டாப்ஸ் போன்று பலவிதமான ஆடைகளுக்கு ஏற்ப பொருத்தமான நகைகளை அணிய விரும்பவுர். அதேபோல் தான் முக அமைப்பு மற்றும் தோலின் நிறத்திற்கு ஏற்ப நகைகள் அணிவதும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும்.


வட்ட முகம் உள்ளவர்கள் :

வட்ட முகம் உள்ளவர்கள் மிகவும் பெரிய, அடர்த்தியான டிசைன் கொண்ட நகைகளை தவிர்க்க வேண்டும். மூக்குத்தி அணிபவர்கள் மிகச்சிறிய மூக்குத்தியாகவோ, ஒற்றைக்கல் வைர மூக்குத்தியோ அணிந்தால் அழகாக இருக்கும். அதேபோல் தான் கம்மல்களும் நீளமாக தொங்கும் காதணிகளை அணியாமல் சிறிய காதோடு ஒட்டிய கம்மல் வகைகள் பொருத்தமாக இருக்கும். நீண்ட காதணிகள் முகத்தை மேலும் வட்டமாகவே காட்டும்.
வட்ட முகம் உள்ளவர்கள் கழுத்திற்கு ‘V’ வடிவ நெக்லஸ் அல்லது பெண்டன்ட் கொண்ட செயினை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும். கழுத்தை ஒட்டிய வட்ட நெக்லஸ் அணிவது முகத்தை மேலும் வட்டமாக காட்டும். ‘V’ வடிவ நெக்லஸ் போடும்போது முகம் நீள்வட்டமாக தெரியும். வட்ட முகம் உள்ளவர்கள் சிகப்பாக இருந்தால் அவர்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் பொருத்தமாக இருக்கும்.

நீள்வட்ட முகம் உள்ளவர்களுக்கு :

நீள்வட்ட (ஓவல்) முகம் உள்ளவர்களுக்கு நகையானாலும், புடவை மற்றும் சல்வார் என்றாலும் நிறைய தேர்வுகள் சாத்தியமாகும். நகைகளில் எந்த டிசைன் வேண்டுமானாலும் அணியலாம் என்றாலும், கழுத்தை ஒட்டிய சோக்கர், தொங்கும் காதணிகள், பெரிய தோடுகள், பெரிய வட்ட வடிவ மூக்குத்தி போன்றவை கூடுதலான அழகை கொடுக்கும்.

சருமத்தின் நிறம் கருப்பாய் உள்ளவர்கள் :

கருப்பு மற்றும் மாநிறம் சருமம் கொண்டவர்கள் பொதுவாகவே லேசான மெல்லிய நகைகளை அணிந்தாலே பாந்தமாக இருக்கும். மூக்குத்தியும், காதில் சிறிய தோடும் மிகப் பொருத்தமாக இருக்கும். அதிக அடர்த்தியான கற்கள் கொண்ட நகையோ, பட்டையாக உள்ள தங்க நகைகளோ பொருத்தமாக இருக்காது.
கருப்பு சருமம் கொண்டவர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிற கல்பதித்த நகைகள் அணியும்போது அது முத்தும், கல்லும் சேர்ந்து இருப்பதாய் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். பச்சைக்கல் முத்து, சிவப்புக்கல் முத்து அல்லது நீலக்கல் முத்து கலந்து இருக்கும் நகைகள் அழகாக இருக்கும். கருப்புக்கல்லும் தங்க முத்துக்களும் சேர்ந்திருக்கும் நகை டிசைன்களும் இவர்களுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.
அதிக சரிகை உள்ள பட்டுப்புடவை, ஜரிகை வேலைப்பாடு கொண்ட சல்வார் கமீஸ் போன்றவை அணியும்போது சற்றே பெரிய நகைகளை கூடுதலாக அணியலாம். சாதாரண ஆடைகளுக்கு பெரிய அளவும், ஆடம்பரமாகவும் உள்ள நகைகளை அணிந்தால் பொருத்தமில்லாமல்இருக்கும். மெல்லிய நகைகள் கருப்பு சருமம் உள்ளவர்களுக்கு பாந்தமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply