முக்கிய 5 நோய்களை குணமாக்கும் பசலைக்கீரை

Loading...

முக்கிய 5 நோய்களை குணமாக்கும் பசலைக்கீரைகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்குமே தெரியும். கீரைகளில் நிறைய உள்ளன. அனைத்திலும் சத்துக்கள் ஏராளமாக இருந்தாலும், பசலைக்கீரையில் சற்று அதிகமாகவே சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் இந்த கீரை மார்கெட்டுகளில் அதிகம் கிடைக்கக்கூடியது. எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், பசலைக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து, உடலில் இருக்கும் பிரச்சனைகளைப் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது அந்த பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.


எடை குறையும்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பசலைக்கீரையை வாரத்திற்கு 3 முறை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும், குறைவான கலோரிகளும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்து, உடல் எடையைக் குறைக்கும்.


புற்றுநோய்

பசலைக்கீரையில் உள்ள வளமான ப்ளேவோனாய்டுகள், உயிரைப் பறிக்கும் கொடிய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.


கண்களுக்கு நல்லது

ஒருவர் பசலைக்கீரை யை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான லுடீன் மற்றும் ஜியாஜாந்தின், கண்புரை வருவதைத் தடுத்து, முதுமை காலத்தில் ஏற்படும் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கும்.


இரத்த அழுத்தம் குறையும்

பசலைக்கீரையில் உள்ள பெப்டிடைடுகள், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.


ஆரோக்கியமான எலும்பு

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள், பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.


இதய ஆரோக்கியம்

பசலைக்கீரையின் மற்றொரு நன்மை, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதற்கு பசலைக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களில்மிருந்து இதயத்தைப் பாதுகாக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply