முகத்தில் எண்ணெய் வழிந்து கருமையாக காட்சியளிப்பதைத் தடுக்க சில டிப்ஸ்

Loading...

முகத்தில் எண்ணெய் வழிந்து கருமையாக காட்சியளிப்பதைத் தடுக்க சில டிப்ஸ்
மஞ்சள் தூள்

மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதைத் தடுக்கும். அதற்கு மஞ்சள் தூள் சிறிது எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5-10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிம்பிள் நீங்குவதோடு, எண்ணெய் பசையும் கட்டுப்படுத்தப்படும்.


எலுமிச்சை சாறு

எலுமிச்சை சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும். மேலும் சருமத்தின் pH அளவை தக்க வைக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்


வினிகர்

வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பது தடுக்கப்படும்.


பப்பாளி

தினமும் பப்பாளியை சிறிது அரைத்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, முகத்தில் எண்ணெய் வழிவது தடுக்கப்பட்டு, முகம் பிரகாசமாக இருக்கும்.


சோள மாவு

சோள மாவும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கும். அதற்கு சிறிது சோள மாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply