முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் போக்கும் எலுமிச்சை

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8dகோடைகாலத்தில் அதிக வெயிலால் உடலில் எண்ணெய் பிசுபிசுப்பு, வியர்வை, கரும்புள்ளிகள் ஏற்படும். எலுமிச்சை, வெள்ளரி, ஆரஞ்சு, தக்காளி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், உடலுக்கு குளிர்ச்சி, வண்ணத்தை தரும் எலுமிச்சையின் பயன்அறிவோம்.

எலுமிச்சையை பயன்படுத்தி உடலில் எண்ணெய் வடிதல், கரும்புள்ளிக்கான மருந்து தயாரிக்கலாம். எலுமிச்சை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் வடிதல் போகும். தோலில் ஏற்படும் கரும்புள்ளி மறையும். முகப்பரு வராமல் தடுக்கும்.கொளுத்தும் வெயில் காரணமாக எண்ணெய் அதிகளவில் சுரப்பதால் தோல் பாதிக்கும். இதற்கு எலுமிச்சை மருந்தாகிறது. தோல் ஆரோக்கியம் அடையும். ஆரஞ்சு பழத்தின் தோலை பயன்படுத்தி தோலில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சந்தனம், ஆரஞ்சு பழத்தோல், பால் அல்லது பன்னீர். சந்தனப் பொடியுடன் நீர் விடாமல் அரைத்த ஆரஞ்சு பழத்தோலை சேர்க்கவும். இதனுடன் பால் அல்லது பன்னீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் மேல்பூச்சாக பயன்படுத்தி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவும்போது கருமை, எண்ணெய் பிசுபிசுப்பு போகும். உடல் குளிர்ச்சி அடையும். வியர்வை இல்லாமல் செய்கிறது. ஆரஞ்சு பழத்தோல் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. சந்தனம் குளிர்ச்சி தரக்கூடியது. பன்னீர் எரிச்சலை போக்கும்.
தக்காளி, வெள்ளரியை பயன்படுத்தி எண்ணெய் வடிதல், கரும்புள்ளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய், அரிசி மாவு. வெள்ளரிக்காய் பசையுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவினால், எண்ணெய் பசை, கரும்புள்ளி குறையும். கோடைகாலத்தில் ஏற்படும் அதிகப்படியான உஷ்ணம் காரணமாக எண்ணெய் பிசுபிசு, வியர்வை, கரும்புள்ளி போன்றவை தவிர்க்க முடியாதவை. வெள்ளரிக்காய் வியர்வையை தடுக்கும் தன்மை கொண்டது. இதை பயன்படுத்துவதன் மூலம் தோல் நன்றாக இருக்கும்.
தக்காளியை பயன்படுத்தி கரும்புள்ளியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தக்காளி, எலுமிச்சை, மஞ்சள் பொடி, கடலை மாவு. தக்காளியை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதில் சிறிது எலுமிச்சை சாறு பிழியவும். சிறிது மஞ்சள் பொடி, கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளி மறையும். எளிதில் கிடைக்க கூடிய எலுமிச்சை, வெள்ளரி, தக்காளி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கோடைகாலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply