மார்வாரி கட்டா புலாவ்

Loading...

மார்வாரி கட்டா புலாவ்

கட்டா செய்வதற்கு…

கடலை மாவு – 1 கப்,
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்,
தயிர் – 2-3 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
ஓமம் – 1/4 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்- தனியாக.புலாவ் செய்ய…

பாசுமதி அரிசி – 1 கப், (3/4 பாகம் உதிர் உதிராக வடித்தது)
நெய் – 1 டீஸ்பூன் (பிசறி வைக்கவும்),
மிளகு – 10,
முந்திரி – 10,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – தேவைக்கு,
பச்சைமிளகாய் – 2-3,
பட்டை துண்டு – 2,
கிராம்பு – 4,
ஏலக்காய் – 2 (சின்னதாக இடித்தது).


எப்படிச் செய்வது?

கட்டா…
பொரிப்பதற்கு கொடுத்த எண்ணெயைத் தவிர மேேல கட்டாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தயிருடன் சேர்த்து மிதமாக பிசையவும். தண்ணீர் வேண்டாம். இந்தக் கலவையை மூடி 15 நிமிடம் வைக்கவும். பின் எடுத்து இரண்டு கைகளைக் கொண்டு குழல் மாதிரி உருட்டவும். இப்படி 4-6 குழல்கள் வரும். ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்
விட்டு நன்கு கொதிக்க வேண்டும். அப்போது இந்த உருட்டிய குழல்கள் அதில் போட்டு மூடி 15 நிமிடம் வேக விடவும்.
பின் வடித்து எடுத்து ஆறியதும் 1/2 இன்ச்சுக்கு வெட்டி துண்டுகள் போடவும். இடைவெளி விட்டு தனியாக வைக்கவும்.
புலாவ்…
ஒரு தவாவில் நெய் விட்டு சூடானதும், சீரகம், முந்திரிப்பருப்பு, கட்டா துண்டுகள் சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு அனைத்தையும் சேர்த்து வதங்கியதும், வடித்த சாதத்தை சேர்த்து சாதம் உடையாமல் கிளறி பொடித்த மல்லித்தழை தூவி கலந்து சூடாக பரிமாறவும்.


குறிப்பு:

மிக ருசியாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இந்த கட்டா புலாவுடன் விருப்பப்பட்டால் 6 பாதாமை பொடித்து அலங்கரித்து பரிமாறலாம். பண்டிகை ஸ்பெஷல்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply