மாம்பழத்தின் மாயாஜால மருத்துவங்கள்

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழங்களின் அரசன் என்று அழைப்பார்கள். இதனுடைய சுவையோ மிகவும் அற்புதமான இனிப்புச் சுவையைக் கொண்டது.

நீர்ச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், விட்டமின் C போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
மாம்பழத்தை சாப்பிட்டு அதன் பின் உடனே பால் குடித்து வந்தால், உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
மாம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால் இது ரத்தசோகையை குணப்படுத்துகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி வரட்சியான சருமங்களில் வைத்து, 10 நிமிடத்திற்கு பின் கழுவி வந்தால், சருமம் மென்மையாகும்.
மாம்பழத்தை பாலில் கலந்து, இரவு உணவுக்கு பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு சீராக இருக்கும்.
மாம்பழத்தில் விட்டமின் E இருப்பதால், செக்ஸ் ஹார்மோன்களை சீராக வைத்து, பாலியல் உணர்வினை தூண்டி, தாம்பத்திய உறவை நீட்டிக்கச் செய்கிறது.
குளுடாமின் என்னும் அமிலம் மாம்பழத்தில் இருப்பதால், மாம்பழத்தை தினமும் உணவுக்கு பதிலாக சாப்பிட்டு வந்தால், கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்தியை தூண்டவும் உதவியாக உள்ளது.
மாம்பழத்தினை சாறு எடுத்து குடித்து வந்தால், பல்வலி, ஈறுவலி மற்றும் நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்துகிறது.
மாம்பழத்தில் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளதால், இவை புற்றுநோய்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

குறிப்பு

மாம்பழத்தை வெறும் வயிற்றிலும், உணவோடும் சேர்த்து சாப்பிடக் கூடாது, உணவு சாப்பிட்ட பின் 20 நிமிடம் கழித்து மாம்பழத்தை சாப்பிட வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply