மனிதக் கண்ணீரின் தனித்துவம் பற்றி தெரியுமா

Loading...

மனிதக் கண்ணீரின் தனித்துவம் பற்றி தெரியுமாகண்ணீர்த் துளிகளின் வலிமை பற்றி நாம் அனைவரும் நிச்சியம் அறிந்திருப்போம். ஆனால் அவற்றிற்கு பல சிறப்பியல்புகள் இருப்பதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏன் விஞ்ஞானிகள் கூட தற்பொழுதுதான் சில சிறப்பியல்புகள் தொடர்பில் அறிந்திருக்கின்றார்கள்.
ஆம், Maurice Mikkers எனும் கலைஞர் நுணுக்குக்காட்டியின் உதவியுடன் ஒருவரின் கண்ணீர்த்துளிகளை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவதானித்துள்ளதுடன், அவற்றை ஏனைய சிலரின் கண்ணீர்த்துளிகளுடனும் ஒப்பிட்டு இருக்கின்றார்.
இதன் மூலம் சாதாரணமான நிலையில் ஒருவரின் கண்ணிலிருந்து வெளியேறும் கண்ணீர்த்துளியானது பனித்துகள்கள் போன்ற வடிவத்திலிருக்கும் என்பதை கண்டறிந்துள்ளார்.

இதேவேளை ஒருவர் சந்தோசம், கவலை போன்ற சந்தர்ப்பங்களில் சிந்தும் கண்ணீர்த்துளிகளின் வடிவங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று வெவ்வேறு நபர்களின் கண்ணீர்த்துளிகளும் வடிவத்தில் வேறுபடுகின்றன.
இதன் தொடர்ச்சியாக லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிர் மருத்துவவியல் விஞ்ஞானியான Naomi Chayen என்பவர் கண்ணீர்த்துளிகளின் வேறுபாட்டிற்குரிய காரணங்களை கண்டறியும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply