மணிக்கு 144.17 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள்

Loading...

%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-144-17-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dமுன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பல சாதனங்களுக்கு தற்போதைய தொழில்நுட்பத்தில் புது வடிவம், உத்வேகம் என்பன கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக சில காலத்திற்கு முன்னர் அதிகளவானவர்களால் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த சைக்கிளிலும் புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது.
Aerovelo Eta எனப்படும் இப் புதிய சைக்கிள் ஆனது மணிக்கு 144.17 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.
இதன் காரணமாக மனித வலுவின் மூலம் மிக வேகமாக இயங்கக்கூடிய சாதனமாக உலக சாதனை படைத்துள்ளது.
இதன் வெளிப் பகுதி கார்பன் பைபரினால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் கார் போன்ற வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
சிறிய அளவான விசையைப் பயன்படுத்தி பாரிய சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பமே இச் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் சில்லுகள் ஒரு நிமிடத்தில் 1,200 சுழற்சிகளை மேற்கொள்ளக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply