மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

Loading...

%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aaமணத்தக்காளிக் கீரை 75 கிராம்,
முளைகட்டிய பயறு 75 கிராம்,
தக்காளி 2,
வெங்காயம் 2,
பச்சை மிளகாய் 3,
கறிவேப்பிலை சிறிது,
உப்பு தேவைக்கேற்ப,
சீரகம் 1 டீஸ்பூன்,
பூண்டு 4 பல்,
பெருங்காயம் 1 சிட்டிகை,
எண்ணெய் 5 மி.லி.,
கொத்தமல்லித் தழை சிறிது.

மணத்தக்காளிக் கீரையை அலசி, பொடியாக நறுக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இரும்புக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு முளைகட்டிய பயறும், கீரையும் சேர்க்கவும். அடுத்து தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். கீரை நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, உப்பு, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply