ப்ரெட் கறுப்பு கடலை போண்டா

Loading...

%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a3%e0%af%8d
தேவையானவை

ப்ரெட் – தேவைக்கு
முளை கட்டிய கறுப்பு கடலை – 200 கிராம்
வெங்காயம் – 1
இஞ்சி-துண்டு
கருவேப்பிலை,கொத்தமல்லி -பொடியாக நறுக்கியது சிறிது
பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கியது
மிளகாய்த்தூள் – 1ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொரிக்க – எண்ணை.


தயாரிக்கும் முறை

முளை கடலையை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த கடலையில் ஒரு கரண்டி எடுத்து தனியே வைத்து விட்டு மீதியை மிக்ஸியில் அரைக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய், கருவேப்பிலை.கொத்தமல்லி இவற்றை வதக்கி உப்பு சேர்த்து இதனுடன் வேகவைத்து எடுத்து வைத்த கடலை,அரைத்த கடலை எல்லாவற்றையும் சேர்த்து மிளகாய்த்தூள்,மசாலாத்துள் சேர்த்து நன்றாக கலக்கவும்.பிறகு ப்ரெட் ஒன்றை எடுத்து லேசாக தண்ணீர் தெளித்து கையால் அழுத்தி அதற்குள் கடலை மசாலாவை வைத்து உருண்டையாக உருட்டவும்.எண்ணையில் பொரிக்கவும்.ப்ரெட் சன்னா போண்டா தயார்.எல்லா பயறுகளையும் இது போல் போண்டா அல்லது கட்லெட் ஆக செய்யலாம்.கட்லெட் செய்து பன்னுக்குள் வைத்து தக்காளி,வெங்காயம் வைத்து பர்கராக செய்யலாம்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply