போக்கிமான் கோ கேமால் சுடுகாட்டில் மரத்தில் சிக்கிய பெண்

Loading...

போக்கிமான் கோ கேமால் சுடுகாட்டில் மரத்தில் சிக்கிய பெண்ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “போக்மான் கோ” எனும் கேம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் இந்த கேம் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது.
இந்நிலையில், வேகமாக அதிகரித்து வரும் போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த ‘7 பார்க் டேட்டா’ என்ற நிறுவனம் நடத்தியுள்ளது.
பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்.
பேஸ்புக்கில் கழிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு நேரத்தை போக்கிமான் கோ விளையாடுவதற்காக செலவிடுகிறார்கள். போக்கிமான் கோ விளையாட செலவிடும் நேரம் மற்ற பிரபலமான அப்ளிகேஷன்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்டவற்றை விடவும் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
போக்கிமான் கோ கேம் பல விபரீத சம்பவங்களுக்கும் காரணமாகி வருகிறது. அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிக் கொண்டிருந்த பெண் சுடுகாட்டில் ஒரு மரத்தில் சிக்கி, பின்னர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டிருக்கிறார்.
கனடாவை சேர்ந்த இருவர் போக்கிமான் கோ கேம் விளையாடிக்கொண்டே கனடா நாட்டின் எல்லையைத்தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை எல்லையில் ரோந்து பணியிலிருந்த காவலர்கள் கைது, எச்சரிக்கைக்குப் பின் விடுதலை செய்திருக்கின்றனர். இப்படி, போக்கிமான் விளையாட்டு விபரீத விளைவுகளையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply