பேரீச்சம் பழ ஊறுகாய்

Loading...

%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d
பேரீச்சம்பழம் – 20 (கொட்டையை நீக்கியது),
தோல் நீக்கி துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன்,
கெட்டி புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெயில்லாமல் வறுத்து பொடித்த வெந்தயத்தூள் – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு-தேவைக்கு,
கடுகு – தாளிக்க.

பேரீச்சம்பழத்தை நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும். இஞ்சித் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அரைத்த பேரீச்சம்பழ விழுது, புளிக் கரைசல், மிளகாய்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். வெந்தயத்தூள் தூவி கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply