புரதச் சத்து நிறைந்த சோயா பீன்

Loading...

புரதச் சத்து நிறைந்த சோயா பீன்தாவர உணவுகளில் மிகவும் ருசியான சோயா பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒர் உணவாகும். சோயா பீன் (Bean) (சோயா அவரை) மிக அதிக புரதச் சத்து நிறைந்த தானியமாகும். உணவுகளில் உள்ள புரதத்தின் அளவுகள் ( 100g இற்கு கணக்கிடப்பட்டுள்ளது.
உணவு வகைபுரதத்தின் அளவு (கிராம் இல்)
அரிசி6.4
சோயா பீன 43.2
கௌபி24.1
பயறு24.0
உழுந்து24.0
மிகையான புரதச் சத்தும், விற்றமின்களும் உள்ளடங்கியிருப்பதனால் சோயா பீன், வளரும் பிள்ளைகளுக்கு ஒரு நிறை ஆகாரமாகும். அது மட்டுமல்லாமல் அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்தியையும் கொடுக்கின்றது.
பால் ஒவ்வாமை நோய் உள்ள குழந்தைகளுக்கு அதற்கு ஈடாக சோயா பீனிலிருந்து எடுக்கப்படும் பால் அளிக்கப்படுகின்றது. சோயா பீனில் உள்ள உணவுச் சத்துக்களும் பெறுமானங்களும் ( 100 கிராமிற்கு கணிக்கப்பட்டுள்ளது)
புரதம் – 43.2
கொழுப்பு – 19.5
நார்ப்பொருள் – 3.7
மாச்சத்து – 20.9
சக்தி (Kcal) – 432
கல்சியம்( mg) – 240
பொஸ்பரஸ் ( mg) – 690
இரும்பு ( mg) – 10.4
விற்றமின் A ( mg) – 426
நயாசின் ( mg) – 3.2
தயமின் ( mg) – 0.73
போலிக் அமிலம் ( mg) free – 8.65
சோயா பீனில் செசித்தின் அளவு உள்ளதால் உடலில் உள்ள கொலஸ் ரோலைக் கட்டுப்படுத்த இது உதவும். மாச்சத்து குறைந்த அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளர்கள் இதனை உட்கொள்ள முடியும்.சோயா பீன் ( அவரை) தானியம் ஜப்பானிலும், சீனாவிலும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றது.
சோயா பீனை தானியமாகவும் வே வைத்தும் உட்கொள்ளலாம். இதிலிருந்து எடுக்கப்படும் பால், சீஸ், மாஜரீன் முதலிய உணவுகள் மேலைச்தேச நாடுகளில் அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. சோயா பீனில் இருந்து செய்யப்படும் ஐஸ்கிறீம் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமானதாகும்.
சோயா மாவில் இருந்து செய்யப்படும் இறைச்சியைப் போன்றே ருசியும், மணமும் தோற்றமும் கொடுக்கும் உணவே சோயா மீற் ( Soya meat) ஆகும். எம்மவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதும், பலராலும் விரும்பி உண்ணத்தக்கதுமான இந்த சோயா மீற்றைத் தவிர நாம் சோயா மாவையோ, சோயா பாலையோ மிக மிக அரிதாகவே பாவிக்கின்றோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவு வகைகளை சோயா மாவிலிருந்தும் சோயா பாலில் இருந்தும் தயாரிக்கலாம். உதாரணமாக சோயா மா கஞ்சி, சோயா மா ரொட்டி, சோயா பஜ்ஜி போன்ற உணவுகள்.
எனவே எம்முடைய அன்றாட உணவு வேளைகளில் சோயா உணவுகளை சேர்த்துக் கொண்டு நிறைவான சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்வோம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply