புதினா தக்காளி சாதம்

Loading...

புதினா தக்காளி சாதம்
தேவையானவை:

பச்சரிசி – 1 கப்
உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

புதினா – அரை கட்டு
மல்லித்தழை – அரை கட்டு
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 4 பல்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
தக்காளி 3

தாளிக்க:
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்,
பட்டை ஒரு துண்டு


செய்முறை:

அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.
புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினா , மல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.
சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் இறக்கவும்.
சுவையான புதினா தக்காளி சாதம் ரெடி

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply