புண் சிரங்கை குணப்படுத்தும் எழுத்தாணிப் பூண்டு

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும் எழுத்தாணி போன்ற உருண்ட தண்டுகளில் நீல, மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி. வயல் வரப்புகளில் தானே வளர்வது. இதற்கு முத்தெருக்கன் செவி என்றொரு பெயரும் உண்டு.

இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது. 1. 5 முதல் 10 கிராம் இலைகளை நன்கு அரைத்துக் காலை மாலை கொடுத்து வரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீத பேதி குணமாகும்.
2. இலைச் சாற்றுடன் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி சொறி, சிரங்குக்குப் பூச குணமாகும்.
3. 5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை குடித்துவர மார்பகம் வளர்ச்சி அடையும். கரப்பான், பரு, பிளவை ஆகியவை தீரும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply