பீர்க்கங்காய் கத்தரிக்காய் சால்னா

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95பீர்க்கங்காய் – 200 கிராம்,
கத்தரிக்காய் – 200 கிராம்,
வேகவைத்த பலாக்கொட்டை – 6,
பெரிய வெங்காயம் – 1,
பெரிய தக்காளி – 1,
துருவிய இஞ்சி, பூண்டு – தலா 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
கொத்தமல்லி, புதினா – சிறிது,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
தேங்காய்ப்பால் – 1 கப்,
வேகவைத்த கடலைப் பருப்பு – 1 ½ டேபிள்ஸ்பூன்,
பட்டை, ஏலம்,
கிராம்பு – தலா 1,
எண்ணெய் + நெய் – 4 டீஸ்பூன்.

கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊறவைத்து வேக வைத்து எடுக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி வட்ட வடிவமாக வெட்டி வைக்கவும். கத்தரிக்காயை நான்காக அரிந்து வைக்கவும். கடாயை காயவைத்து அதில் எண்ணெய் + நெய்யை சூடுபடுத்தி பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி, துருவிய இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும். பின் தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி, கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி குழைய வேகும் வரை குறைந்த தீயில் வைக்கவும். கத்தரிக்காய், வெந்த பலாக்கொட்டை, பீர்க்கங்காயை சேர்த்து நன்கு கிளறி வேக விடவும். கடலைப்பருப்பு, தேங்காய்ப்பாலுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply