பிரவுன் புலாவ்

Loading...

பிரவுன் புலாவ்கேரட், பட்டாணி, பிரக்கோலி, குடைமிளகாய் – 1/4 கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பிரவுன் ரைஸ் – 1/2 கப்,
இஞ்சிபூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
பட்டை – 1 (சிறிய துண்டு),
ஏலக்காய் – 1,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிது.

பிரவுன் புலாவ்
பிரவுன் ரைஸை 1 கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து, குக்கரில் 6-7 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சிபூண்டு விழுது, ஏலக்காய், பட்டை, பச்சைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் குழையாமல் வதக்கவும். வேக வைத்த அரிசியை சேர்த்து, உப்பு போட்டு மெதுவாக கலக்கவும். 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான பிரவுன் ரைஸ் புலாவ் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply