பிரக்கோலி கதி ரோல்

Loading...

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8dபிரக்கோலி – 1 முழு பூ,
நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் – தலா 1,
உருளைக்கிழங்கு – 1 (வேகவைத்து மசிக்கவும்),
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – தாளிக்க,
ரொட்டி அல்லது சப்பாத்தி – 10.


எப்படிச் செய்வது?

கொதிக்கும் நீரில் சிறிது உப்பு போட்டு பிரக்கோலியை 1 நிமிடம் போட்டு எடுக்கவும். ஆறிய பிறகு பூக்களாக ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு வெடித்ததும் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தேவையான உப்பு, மிளகாய் தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு பிரக்கோலி பூக்களை சேர்த்து வதக்கி இறக்கவும். சப்பாத்தி அல்லது ரொட்டி நடுவில் இக்கலவையை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply