பாத வெடிப்பை போக்கும் வேப்பிலை

Loading...

பாத வெடிப்பை போக்கும் வேப்பிலைவெறும் கால்களால் நடக்கும்போது பாதத்தில் உள்ள கொழுப்பு படிவங்கள் வெளியேறிவிடுவதால் உடல் எடையால் ஏற்படும் அழுத்தம் தாங்காமல் பாதத்தில் உள்ள தோல்கள் அகன்று விடுகிறது. இதன் காரணமாகத்தான் குதிகால்களில் வெடிப்பு ஏற்படுகிறது. நாம் அதிக எடையாக இருந்தாலும் குறைந்த எடையாக இருந்தாலும் சரி முழு எடையையும் தாங்கிக் கொள்வது பாதம் மட்டுமே. நம்மை கவனிக்கும் பாதத்தை நாம் கவனிக்க மறப்பதாலேயே வெடிப்பு ஏற்பட்டு பாதத்தின் அழகு கெடுவதோடு தாங்க முடியாத வலியும் ஏற்படுகிறது.

நமது பிஸியான நேரத்தில் பாதத்தை பராமரிக்க நேரமில்லாததால் வெடிப்பு அதிகமாகி அதிக ரணத்தை உண்டாக்கடகி வலியை ஏற்படுத்துகிறது. மேலும் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் இந்த வெடிப்பு நீடிக்கும். எனவே வாரத்துக்கு இரு முறையாவது நமது பாதத்துக்கு முக்கியத்துவம் செலுத்தி பராமரித்து வந்தால் வெடிப்பு வராமல் பட்டுப்போன்ற குதிகால்களைப் பெறலாம். இதற்காக மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டு பியூட்டி பார்லரில் உட்கார வேண்டிய அவசியம் இல்லை இருபது நிமிடங்கள் போதுமானது.
அதிக செலவும் ஏற்படாது. வீட்டருகே உள்ள வேப்பிலை மரத்தில் இருந்து கொஞ்சம் இலை மற்றும் சுண்ணாம்பு போதுமானது. ஓய்வு நேரத்தில் சுடுதண்ணீரால் பாதங்களை 5 நிமிடம் ஊரவைத்து சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை 15 நிமிடங்கள் ஊரவைத்து, 2 நிமிடம் கால்களை ஸ்க்ரப் செய்து மீண்டும் சுடுநீரில் கழுவி வந்தால் பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கும். வாரம் இருமுறை நேரம் கிடைக்கும்போது பாதங்களை கவனித்துக் கொள்ளலாம். இதேபோல், பப்பாளியைப் பயன்படுத்தியும் குதிகால் வெடிப்பை போக்கலாம்.
நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும். மருந்துக்கடைகளில் வெடிப்புகளைப் போக்க விற்கப்படும் மருந்துகளை தடவினாலும் வீண்தான். பாதம் சொரசொரப்பாவதோடு செலவும் வீணாகிறது. மருந்துகளை மாற்றி, மாற்றி முயற்சி செய்வதை தவிர்த்து இயற்கையான முறைகளை கையாளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply