பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாதனம் கண்டுபிடிப்பு

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%aeநம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏராளமான தொழில்நுட்ப சாதனங்களும், மொபைல் ஆப்களும் உள்ளன.
இந்த வகையில் சமீபத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாதனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
இதன்மூலம் வீட்டில் இருந்து கொண்டே, வெளியே யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
லண்டன் றொயல் கலைக்கல்லூரி மாணவரான கிறிஸ்டியன் நாபிலோக் என்பவர் இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.

இதற்கு முதலில் இந்த கருவியை வீ்ட்டின் கதவில் பொருத்தி வைக்க வேண்டும்.
வீட்டுக்கு யாராவது வந்தாலும் அவர்களுடைய ஸ்மார்ட் போன் மூலம் இந்த கருவியை தொட வேண்டும்.
அப்போது அவர்களின் மொபைலில் இணையப் பக்கம் ஒன்று திறக்கும், இந்த தகவல் வீட்டுக்குள் இருக்கும் நபர்களுக்கும் அனுப்பப்படும்.
தெரியாத நபர்களாக இருந்தால் அதற்கு எந்தவித பதிலும் கொடுக்காமல் கதவை திறக்காமலேயே குட்-பை சொல்லி விடலாம்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு அறையிலும் பொருத்தி வைத்துக் கொண்டால் அறைக்கு செல்லாமலேயே அவர்களுடன் உரையாடலாம்.
இந்த கருவி வருபவர்களை வீடியோ எடுக்கவும், அவர்களை சிறந்த முறையில் வரவேற்க்கும் நோட்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
தவிர, வீட்டை சுற்றி எந்த பகுதியில் வேண்டுமானாலும் இந்த கருவியை நாம் பொருத்திக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply