பல் வலியை போக்கும் மஞ்சள் செம்புள்ளி

Loading...

%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b3வஜ்ரதந்தி என்று சொல்லக் கூடிய மஞ்சள் செம்புள்ளிக்கு மஞ்சள் செம்பூத்தி என்ற பெயரும் உள்ளது. இவற்றில் அதிகமாக முட்கள் காணப்படும். இதை முள்ளி என்று சொல்வார்கள். இதன் பூக்கள் கனகாம்பர வகையைச் சேர்ந்தது. கனகாம்பரத்தை போன்று மஞ்சள் நிறத்தில் பூக்கக் கூடியது. இது ஒரு மேற்பூச்சு மருந்தாக பயன் தருகிறது. குழந்தைகளுக்கும் அளிக்கும் வகையில் பாதுகாப்பான மருந்தாக இது விளங்குகிறது.
கிருமிகளை அழிக்கக் கூடியது. பூஞ்ச காளான்களை போக்கக் கூடியது. காய்ச்சலை தணிக்கக் கூடியது. நரம்பு மண்டலங்களுக்கு சிறந்த ஊக்கத்தை தரக் கூடியது. மூட்டு வலிக்கும் சிறந்த நிவாரணியாக இது விளங்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் கோளாறுகளை இது சரி செய்கிறது. இதன் வேர்களை பயன்படுத்தி பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் ஏற்படக் கூடிய வலி, பற்களில் ஏற்படும் ரத்த கசிவு போன்றவற்றை போக்கக் கூடிய மருந்தை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் வஜ்ர தந்தியின் வேர்கள். இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி முற்றிலுமாக மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு மிளகு சேர்க்க வேண்டும். சிறிதளவு சமையல் உப்பு சேர்க்க வேண்டும். இவற்றுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை உள்ளே பருகவும், வாய் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் பல் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தடுக்கும் தேநீரை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மஞ்சள் செம்புள்ளியின் இலைகள். பனங்கற்கண்டு, மிளகு பொடி. தண்டுகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் சாறாக அல்லது பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாறு என்றால் இரண்டு ஸ்பூன், பேஸ்ட் என்றால் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் பருகி வருவதன் மூலம் காய்ச்சலை தணிக்கிறது. சுவாச பாதையில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யக் கூடியதாகவும் விளங்குகிறது. இவ்வாறு வஜ்ரதந்தி எனப்படும் செம்புள்ளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக நமக்கு பயன் தருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply