பலாக்காய் சோயா மற்றும் வெஜ்ஜி மக்பூலா

Loading...

%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5பலாக்காய் மற்றும் சோயா – 100 கிராம்,
பாஸ்மதி அரிசி – 200 கிராம்,
வெஜிடபிள் ஸ்டாக் – 1,
பலாக்காய், சோயாவில் பிரட்டி கொள்ள இஞ்சி பவுடர் (அல்லது) துருவிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்,
லெமன் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
அரபிக் மசாலா – 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி விழுது – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

வெண்ணெய் – 25 கிராம்,
ஆலிவ் ஆயில் – 25 கிராம்,
கிராம்பு – 2,
பட்டை – 1 (1 இன்ச் சைஸ்),
ஏலக்காய் – 1,
பிரிஞ்சி இலை – 1,
காய்ந்த லெமன் – 1.

தனியாக வட்டவடிவமாக நறுக்கி வெண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ளவும்.

வெஜ்ஜி செய்ய…

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 50 கிராம்,
வாழைக்காய் – 25 கிராம்,
பிரக்கோலி – 25 கிராம்,
கேரட் – 25 கிராம்,
மூன்று கலரில் (பச்சை, மஞ்சள், சிவப்பு) குடைமிளகாய் – 50 கிராம்.

அரபிக் கரம் மசாலாவிற்கு…

மிளகு – 1/2 டீஸ்பூன்,
தனியா – 1/2 டீஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு,
கிராம்பு – 1,
சீரகம் – 2 டீஸ்பூன்,
ஜாதிக்காய் – சிறு துண்டு,
பிரிஞ்சி இலை – 1.

எப்படிச் செய்வது?

சோயாவை கழுவி வெந்நீரில் ஊறவைத்து தண்ணீரை வடித்து பிழிந்தெடுக்கவும். பலாக்காயை கழுவி தோல் சீவி பெரிய துண்டுகளாக போட்டு வைக்கவும். பலாக்காய், சோயாவில் அரபிக் மசாலா (கீழே கொடுத்துள்ள அரபிக் மசாலாவை சேர்க்கவும்), லெமன் ஜூஸ், தக்காளி விழுது, இஞ்சி பவுடர் சேர்த்து நன்கு ஊறவைக்கவும். அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் + வெண்ணெய் சேர்த்து கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மூன்று நிற குடைமிளகாய், வாழைக்காயை வட்டவடிவமாக நறுக்கி, பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் பிரக்கோலியை பூ பூவாக தனியாக பிரித்து அதையும் பொரித்தெடுக்கவும். வெஜிடபிள் ஸ்டாக்கை 300 மில்லி தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும்.
மீதி உள்ள வெண்ணெய் + எண்ணெயை சூடுபடுத்தி அதில் தாளிக்க கொடுத்தவைகளை சேர்த்து தாளித்து, பலாக்காய் மற்றும் சோயாவை சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அதன் மேல் பொரித்த காய்களை அடுக்கி வைக்கவும். அதன் மேல் அரிசியை போடவும். கொதித்துக் கொண்டிருக்கும் வெஜ் ஸ்டாக் தண்ணீரை இதன் மேல் ஊற்றி அப்படியே குக்கரில் சிறு தீயில் வைத்து வேக விடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply