பலாக்காய் உருளை குருமா

Loading...

%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e2%80%89%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e2%80%89%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%beஉருளைக்கிழங்கு – 150 கிராம்,
பலாக்காய் – 100 கிராம்,
பட்டை, ஏலம், கிராம்பு – தலா 1,
வெங்காயம் – 2,
தக்காளி – 2, பச்சைமிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
இஞ்சிபூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் + நெய் – 4 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா –
தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன்,
முந்திரி – 4.

பலாக்காயை நடுத்தரமாக வெட்டவும். வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் வெட்டவும். குக்கரை அடுப்பில் காயவைத்து அதில்
எண்ணெய் + நெய் விட்டு பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளிக்கவும். வெங்காயம் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, அதில் இஞ்சி-பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு மசிய வதக்கவும். பிறகு காய்கறிகள், உப்பு, மசாலா வகைகளையும் சேர்த்து குறைந்த தனலில் நன்கு வேகவிடவும். வெந்ததும் தேங்காய், முந்திரியை அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சால்னாவில் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான சப்ஜி சால்னா ரெடி. பஹாரா கானா, பொரிச்ச கறியுடன் இந்த சப்ஜி சால்னாவை சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply