பட்டர் பீன்ஸ் குருமா

Loading...

%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be
என்னென்ன தேவை?

பட்டர் பீன்ஸ் – 20 கிராம்,
உருளைக்கிழங்கு – 2 (இந்த இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும்),
வெங்காயம் – 2,
பழுத்த தக்காளி – 2,
பச்சை மிளகாய் கீறியது – 2,
இஞ்சி,பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
கிராம்பு, பட்டை ஒன்றிரண்டாக தட்டியது – 1/2 டீஸ்பூன்,
மல்லித் தூள்- 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 2 சிட்டிகை,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.


அரைக்க…

தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
கசகசா – 1 டீஸ்பூன்,
முந்திரி – 4,
சோம்பு – 1/2 டீஸ்பூன்.
இவை அனைத்தையும் விழுதாக சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, ஒன்றிரண்டாக தட்டிய பட்டை, கிராம்பு இவைகளை அடுத்தடுத்து போட்டு நன்கு வதக்கவும். அனைத்துப் பொடிகளையும் சேர்க்கவும். பிறகு வெந்த உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் சேர்த்து பிரட்டி அரைத்த விழுதை சேர்த்து 1 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply