பச்சைப் பயறு கீரை தோசை

Loading...

%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88
தேவையான பொருட்கள் :

பச்சைப் பயறு – 100 கிராம்
கோதுமை மாவு – 50 கிராம்
இட்லி மாவு – 100 கிராம்
முருங்கைக்கீரை – 50 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சைப் பயறை 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
* அரைத்த பச்சை பயிறு மாவுடன் இட்லி மாவு, கோதுமை மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை தனியே வேகவைத்து அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து, வேகவிட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான பச்சைப் பயறு – கீரை தோசை ரெடி.
* முருங்கைக்கீரைக்குப் பதில் சிறுகீரையும் பயன்படுத்தலாம்.

Loading...
Rates : 0
VTST BN