நீரிழிவை கட்டுப்படுத்தும் கார உணவுகள்

Loading...

%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சினை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது.
மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அத்தகைய காரமான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை சாப்பிட தொடங்கலாமே. இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

இலவங்க பட்டை

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்களில் இலவங்கப்பட்டை மிகவும் சிறந்தது. ஏனெனில் இது உடலில் இருக்கும் குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு உடலில் குளுக்கோஸ் மெட்டபாலிசப் பிரச்சனையால் தான் வருகிறது.
இந்த நேரத்தில் இன்சுலின் உற்பத்தி உடலில் குறைவதால், குளுக்கோஸ் குறைபாடு ஏற்படுகிறது. இந்த உணவுப் பொருளில் மெத்தில் ஹைட்ராக்ஸில் பாலிமர் என்னும் பொருள் இருப்பதால், இது உடலில் இருக்கும் சர்க்கரையை உறிஞ்சிவிடுகிறது. சில உணவுகளில் இலவங்கப்பட்டையை பொடி செய்து, சில இனிப்பு பொருட்களில் சேர்த்திருப்பார்கள். அதற்கு காரணம் இதுவே.

கிராம்பு

இந்த பொருளில் இலவங்கப்பட்டையை விட அதிகமாக பாலிஃபினால் இருக்கிறது. ஆனால் இதை இலவங்கப்பட்டையை போல் அதிக அளவில் சாப்பிட முடியாது. ஏனெனில் இது மிகவும் காரமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், அது பட்டையை விட மிகவும் சிறந்தது அல்ல. இது காரப் பொருட்களில் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில், இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மிளகு

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலில் முதலில் ஏற்படும் பிரச்சனை இரத்த ஓட்டம் தான். ஏனெனில் அந்த இரத்த ஓட்டம் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு மெதுவாக பாய்கிறது. ஆகவே, மிளகில் இருக்கும் கேப்சியன், இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு, நீரிழிவு வருவதற்கான அறிகுறிகளை கட்டுப்படுத்துகிறது.

மஞ்சள்

மஞ்சள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, சமன்செய்கிறது. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் அதிகமான அளவு சர்க்கரை இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்து, விரைவில் நோயானது தொற்றிவிடுவதோடு, அது சரியாக நீண்ட நாட்கள் ஆகிவிடும். ஆனால் மஞ்சளில் நோய் எதிர்ப்பு பொருள் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது ஒரு காரமில்லாத நீரிழிவைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகும்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளியும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள். எப்படி மஞ்சள் உடலில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துகிறதோ, அதே போல் கற்பூரவள்ளி உடலில் பூஞ்சையால் ஏற்படும் பாதிப்பை உடைத்துவிடும்.

பூண்டு

பூண்டு இதயத்திற்கு நல்லது என்று அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஏனெனில் இது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். நீரிழிவு என்பது அனைத்து நோய்களும் எளிதில் வருதற்கான ஒரு நுழைவாயில் என்று கூறலாம்.
இதனால் இதயத்தில் இரத்த அழுத்தத்தை ஏற்ற இறக்கத்தோடு வைப்பதோடு, இதயத்தை மிகவும் மென்மையாக செயல்படுத்தும்.
ஆகவே தான் பூண்டு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான காரமான உணவுப் பொருள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் பூண்டு இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சரியாக செயல்படுத்துகிறது.
ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply