நீரிழிவு நோய்யில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா

Loading...

நீரிழிவு நோய்யில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதாதமிழ் மக்களுக்கு நீரிழிவு நோய் பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதிலிருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்று பல வகையாக ஆராய்ந்து, சென்னை முழுவதும் உள்ள புத்தகக் கடைகள் எல்லாம் ஏறி இறங்கி பல நூறு நூல்களை சேகரித்து வாசித்தோம். அதில் ஒரேயொரு புத்தகம் மட்டும் நீரிழிவை முற்றாக நிறுத்தலாம் என்று கூறியது.
136 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் இருந்து ஒரு முக்கியமாக இருந்த ஒரு பகுதியை இங்கே தருகிறோம். நீங்கள் வைத்தியருடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அவரது மின்னஞ்சலையும் இங்கே இணைத்துள்ளோம்.
செய்திகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய முயற்சியில் இறங்குகிறோம்.
பொதுவாக நீரிழிவை முற்றாகக் குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போது சர்க்கரை நோய்க்கு புல்ஸ்டாப் என்றொரு நூல் வந்துள்ளது. இதில் சர்க்கரை நோயை முற்றாகக் குணப்படுத்தும் வழிமுறைகளை விளக்கப்பட்டுள்ளது.
சித்தவைத்தியம், மேலைத்தேய வைத்தியம் இரண்டையும் கற்ற வைத்தியர் அருண் சின்னையா எழுதிய நூலில் உள்ள தகவல்களில் சிலதை சுருக்கி இங்கே தருகிறோம்.
01. நீரிழிவை குணப்படுத்தும் மூலிகைக் கூட்டு மருந்து.
அ. சிறு குறிஞ்சான் – 100 கிராம்
ஆ. அறுகம்புல் – 50 கிராம்
இ. நாவல்கொட்டை – 50 கிராம்
ஈ. மருதம்பட்டை – 50 கிராம்
உ. திரிபாலா – 50 கிராம்.
இவை அனைத்தையும் பொடி செய்து ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். வேளைக்கு 2 கிராம் வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளையுமாக 15 தினங்கள் சாப்பிட வேண்டும். நீரிழிவு கட்டுக்குள் வரும், தொடர்ந்து 96 தினங்கள் சாப்பிட்டால் நீரிழிவு முற்றாகக் குணமாகிவிடும்.
02. அதிக மூத்திரம், உடல் எரிச்சலை குணப்படுத்த மருந்து ! ஆவாரம் பூவில் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியவை விசேட பலன் கொண்டவை. இவையனைத்தையும் சேர்த்து தயாரிக்கப்பட்டது ஆவாரை பஞ்சாங்க சூரணம் எனப்படுகிறது. நீரிழிவு, அதிக மூத்திரம் போதல், உடல் எரிச்சல் ஆகியவற்றை போக்க இது உதவும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ – என்ற பழமொழியின் கருத்து இதுவாகும்.
03. நீரிழிவிற்கு ஜீன் சிகிச்சை
நீரிழிவு நோயை முற்றாகக் குணப்படுத்த ஜீன் சிகிச்சை விரைவில் வரவிருக்கிறது. இது ஜெனட்டிக் இன்ஜினியரிங் சம்மந்தப்பட்டது. நம் உடலில் இருந்து இரு செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு இன்சுலின் தயாரிக்கச் செய்து, அச்செல்லை மீண்டும் நம் உடலுக்குள் செலுத்துவது. இந்தமுறை இன்னும் சில காலத்தில் வரவிருக்கிறது. வந்தால் நீரிழிவை முற்றாகக் குணப்படுத்தும் உலகம் உருவாகிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply